×

விளையாட்டு விடுதிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

கிருஷ்ணகிரி, மே 3: கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ராஜகோபால் வௌியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக, பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான விளையாட்டு விடுதிகள், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதகமண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி மற்றும் நாமக்கல் ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவிகளுக்கான விளையாட்டு விடுதிகள் ஈரோடு, திருவண்ணாமலை, நாமக்கல், திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தர்மபுரி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை ஜவகர்லால் நேரு விளையாட்டு அரங்கம், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

மாணவிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி, சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் பயிற்சி பெற்ற, சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு, 7ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு, 9ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு, 6ம் வகுப்பு, 7ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு ஆகிய வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர சேர்க்கை நடைபெறும். மாவட்ட அளவிலான தேர்வு போட்டிகள் வருகிற 10ம் தேதி ஆண்களுக்கும், 11ம் தேதி பெண்களுக்கும் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இதில், மாணவர்களுக்கு தடகளம், இறகுபந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல் பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்துப்பந்து, கபடி, மேசைப்பந்து, ஜூடோ, ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல் ஆகிய போட்டிகள் நடைபெறுகிறது.

மாணவிகளுக்கான தேர்வுப் போட்டிகள் தடகளம், இறகுபந்து, கூடைப்பநது, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பநது, வளைகோல்பந்து, டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபடி, டெனனிஸ், ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், வில்வித்தை, பளுதூக்குதல், மேசைப் பந்து, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவிகள், விளையாட்டு விடுதி, முதன்மை விளையாட்டு மைதானத்தில் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பத்தினை, இணையதள முகவரியில் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தினை பதிவேற்றம் குறித்த விவரம், சிறப்பு நிலை விளையாட்டு விடுதிக்கு ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வருகிற 5ம் தேதி மாலை 5 மணி வரையும், முதன்மை நிலை விளையாட்டு மையத்திற்கு வருகிற 6ம் தேதி மாலை 5 மணி வரையும், விளையாட்டு விடுதிக்கு வருகிற 8ம் தேதி மாலை 5 மணி வரையும் பதிவேற்றம் செய்யலாம். குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு ஆன்லைன் விண்ணப்பம் பூர்த்தி செய்ய இயலாது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள், இவ்வாய்ப்பினை பயன்படுத்தி விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்ந்து பயன்பெறலாம். தேர்வு போட்டியில் கலந்துகொள்ள வருகின்றவர்களுக்கு பயணப்படியோ, தினப்படியோ வழங்கப்படாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

The post விளையாட்டு விடுதிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri District Sports and ,Welfare ,Officer ,Rajagopal Vaui ,Tamil Nadu Sports Development Authority ,Madurai ,Trichy ,Tirunelveli ,Coimbatore ,Cuddalore ,Dinakaran ,
× RELATED ஆடு, மாடு, கோழிகளுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க தடுப்பு முறைகள்